/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மொபைல் போன் திருட்டு சிறுவன் உட்பட இருவர் கைது
/
மொபைல் போன் திருட்டு சிறுவன் உட்பட இருவர் கைது
ADDED : ஜன 12, 2025 02:18 AM
மறைமலைநகர்,
மறைமலை நகர் அடுத்த பேரமனுார் பகுதியில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் அடிக்கடி மொபைல்போன் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
கடந்த வாரம் இளைஞர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டில் 6 மொபைல்போன்கள் திருடப்பட்டன.
இதுகுறித்த புகாரின்படி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, மொபைல்போன்களை ஒருவர் திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை கைது செய்து போலீசார் விசாரித்ததில், மொபைல்போன்களை திருடி செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார்,22, என்பவரிடம் விற்றது தெரிந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 6 மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.

