/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக்கில் மான் தோல் கடத்திய சாமியார் உட்பட இருவர் கைது
/
பைக்கில் மான் தோல் கடத்திய சாமியார் உட்பட இருவர் கைது
பைக்கில் மான் தோல் கடத்திய சாமியார் உட்பட இருவர் கைது
பைக்கில் மான் தோல் கடத்திய சாமியார் உட்பட இருவர் கைது
ADDED : ஜூன் 14, 2025 01:27 AM

சூணாம்பேடு:இருசக்கர வாகனத்தில் மான் தோல் கடத்திய சாமியார் உட்பட இருவரை, போலீசார் கைது செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சூணாம்பேடு காவல் எல்லைக்கு உட்பட்ட கொளத்துார் சோதனைச்சாவடியில், நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற 'கே.டி.எம்.,' பைக்கை மடக்கி சோதனையிட்டனர்.
அதில், பதப்படுத்தப்பட்ட மான் தோல் கடத்தி வந்தது தெரிந்தது.
மேலும் அவர்கள் விழுப்புரம் மாவட்டம், ஆதனம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி, 33, சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சபரி, 22, என தெரிந்தது.
முதற்கட்ட விசாரணையில், ஆசைத்தம்பி கோவிலில் சாமியாராக இருந்து கொண்டு குறி சொல்லும் வேலை செய்து வருவதாகவும், பூஜை செய்வதற்காக, மான் தோலில் மேஜை செய்ய சென்னை சென்றதும் தெரிந்தது.
பின், சூணாம்பேடு போலீசார் மேற்கண்ட இருவரையும் கைது செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மான் தோல் கடத்தல் குறித்து, இருவரிடமும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.