/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் அருகே வேன் மோதி இருவர் பலி
/
அச்சிறுபாக்கம் அருகே வேன் மோதி இருவர் பலி
ADDED : அக் 23, 2025 10:43 PM

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே பருக்கல் பகுதியில், பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதியதில், இருவர் உயிரிழந்தனர்.
தொழுப்பேடு, முல்லை தெரு பகுதியைச் சேர்ந்த கணபதி, 25, மற்றும் சிறுமையிலுார் புது காலனி பகுதியைச் சேர்ந்த தினேஷ், 25, ஆகிய இருவரும், நேற்று முன்தினம் இரவு, 'ஸ்பிளெண்டர் பிளஸ்' பைக்கில், அச்சிறுபாக்கம் -- சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் சென்றனர்.
அப்போது, பெருக்கரணை அருகே பருக்கல் பகுதியில், எதிரே வந்த மகேந்திரா டூரிஸ்ட் வாகனம், இவர்களது பைக்கில் மோதியுள்ளது.
இதில், பைக்கில் இருந்து கீழே விழுந்த கணபதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; தினேஷ் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், படுகாயமடைந்த தினேஷை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று, சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்தார்.
பின், விபத்து குறித்து அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மகேந்திரா டூரிஸ்ட் வேனை பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவான, வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

