/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் தொடர் செயின் பறிப்பு வடமாநில கொள்ளையர் இருவர் கைது
/
செங்கையில் தொடர் செயின் பறிப்பு வடமாநில கொள்ளையர் இருவர் கைது
செங்கையில் தொடர் செயின் பறிப்பு வடமாநில கொள்ளையர் இருவர் கைது
செங்கையில் தொடர் செயின் பறிப்பு வடமாநில கொள்ளையர் இருவர் கைது
ADDED : ஏப் 23, 2025 02:14 AM

கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதியில், ஜன., 17ம் தேதி ஆயிஷா, 34, மகேஷ்வரி, 44, அம்மினி, 49, ஆகிய மூன்று பெண்களிடம், அடுத்தடுத்து செயின்கள் பறிக்கப்பட்டன.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.
சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்தினர்.
இதில், உத்தரப்பிரதேச மாநிலம், சாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும், அவர்களில் இருவர், கூடுவாஞ்சேரி பகுதியில் சுற்றி வருவதும் தெரிந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, நேற்று காலை கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில், இதில் தொடர்புள்ள சஞ்சய், 34, சோகான் தபஸ், 36, ஆகிய இருவரை கைது செய்தனர்.
அப்போது, போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடிய சோகான் தபஸ், தண்டவாளத்தில் இடறி விழுந்த போது இடது கை மற்றும் வலது கால் முறிந்தது.
இதையடுத்து, செங்கல்பட்டு மருத்துவமனையில் அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது.
பின், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள சூரஜ் என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.