/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குட்கா தயாரித்த இருவர் மறைமலைநகரில் கைது
/
குட்கா தயாரித்த இருவர் மறைமலைநகரில் கைது
ADDED : ஆக 12, 2025 11:00 PM
மறைமலை நகர்: மறைமலை நகரில் வீடு வாடகைக்கு எடுத்து, குட்கா புகையிலை பொருட்கள் தயாரித்த பீஹார் இளைஞர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சந்தேகத்தின்படி, காட்டாங்கொளத்துார், காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், போலீசார் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் தயாரித்து பதுக்கி வைத்திருந்த, 50 கிலோ குட்கா புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் பண்டிட், 45, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர், காந்தி நகர் மற்றும் கூடலுார் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, குட்கா புகையிலை பொருட்கள் தயாரித்து, சுற்றியுள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து, கூடலுார் அஷ்டலட்சுமி நகரில் போலீசார் சோதனை நடத்தி, 45 கிலோ புகையிலை பொருட்கள், புகையிலை பொருட்கள் தயாரிக்க பயன்படுத்திய நான்கு கிரைண்டர்கள், இரண்டு மிக்சி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அஜித் பண்டிட் மற்றும் அவரது கூட்டாளியான பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தக், 45, ஆகியோரை கைது செய்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.