/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கத்தியை காட்டி மிரட்டிய இருவருக்கு 'காப்பு'
/
கத்தியை காட்டி மிரட்டிய இருவருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 13, 2025 08:53 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே ஆதிவாசி நகர், கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஜித், 27.
புதுப்பட்டு கிராமம், மலை மேட்டுத் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் மகன் சுள்ளான், 19.
இவர்கள் இருவரும் நேற்று, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கக்கிலப்பேட்டை பயணியர் நிழற்குடை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பட்டாக்கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியினர், மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்படி, அப்பகுதிக்குச் சென்ற போலீசார், இருவரையும் கைது செய்து வழக்கு பதிந்து,
மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.