/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது மாவு கட்டுடன் சிறையில் அடைப்பு
/
கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது மாவு கட்டுடன் சிறையில் அடைப்பு
கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது மாவு கட்டுடன் சிறையில் அடைப்பு
கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது மாவு கட்டுடன் சிறையில் அடைப்பு
ADDED : பிப் 19, 2025 11:57 PM

வண்டலுார்வண்டலுார் ரயில் நிலையம் அருகே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, கொலை வழக்கு குற்றவாளிகள் இருவரை போலீசார் துரத்திப் பிடித்தபோது, இருவரும் கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மாவுக் கட்டு போடப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வண்டலுார் மற்றும் சுற்றுப்பகுதியில், கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை, வண்டலுார் ரயில் நிலையம் அருகே, இரு வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவலின்படி, போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். போலீசாரைக் கண்டதும், இரு வாலிபர்கள் ஓடத் துவங்கினர்.
போலீசார் அவர்களைத் துரத்தியபோது, கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை கீழே போட்டுவிட்டு, ரயில் தண்டவாளத்தில் ஓடினர். அப்போது இருவரும் தடுமாறி கீழே விழுந்து, போலீசாரிடம் சிக்கினர்.
இதையடுத்து அவர்கள் விட்டுச் சென்ற 2 கிலோ கஞ்சாவை மீட்ட போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில், அவர்கள் இருவரும், கடந்த ஆண்டு பிப்., 29ல் கொலை செய்யப்பட்ட தி.மு.க., பிரமுகர் ஆராமுதன் கொலை வழக்கில் தொடர்புடைய சம்பத்குமார், 23, மணிகண்டன், 19 என்பதும், சிறையில் இருந்து வெளியே வந்த பின், வண்டலுார் பகுதியில் தங்கி, கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது.
போலீசாரிடம் சிக்காமல் இருக்க தப்பி ஓடி, கீழே விழுந்ததில் மணிகண்டனுக்கு இடது கை முறிந்தது. சம்பத்குமாருக்கு வலது கால் முறிந்தது. எனவே, இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கே, இருவருக்கும் மாவுக் கட்டு போடப்பட்டது.
பின், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சிறையில் அடைத்தனர்.

