/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டூ-வீலர் திருடிய வழக்கில் இருவருக்கு 'காப்பு'
/
டூ-வீலர் திருடிய வழக்கில் இருவருக்கு 'காப்பு'
ADDED : ஜன 13, 2025 11:46 PM
கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி, திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பழனி, 42; பெயின்டர். வீட்டின் முன், தன் யமஹா புதிய டூ-வீலரை நிறுத்திவிட்டுச் சென்றார்.
மறுநாள் வழக்கம்போல் பணிக்குச் செல்ல வெளியே வந்த போது, வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த டூ-வீலர் காணாமல் போயிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்ற நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, திருடு போனதாக கூறப்பட்ட அந்த புதிய யமஹா டூ-வீலரை ஓட்டி வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த டேவிட் என்ற வினோத், 25, தஞ்சாவூர் மாவட்டம், பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வசந்தராஜன், 28, என தெரிந்தது.
இருவரும் டூவீலரை திருடியதை ஒப்புக்கொண்டதால், இருவரையும் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.

