ADDED : மார் 02, 2024 11:05 PM

அ நிறம் | அளவு
அரும்பாக்கம்,:அரும்பாக்கம் பகுதியில் கடைகளில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவலின்படி, விநாயகபுரம் இரண்டாவது தெருவில் உள்ள அன்னம்மாள் என்பவரின் மளிகை கடையில் குட்கா இருப்பது தெரியவந்தது.
அதேபோல், குமரப்பா லைனில் உள்ள ஜி.எஸ்.கே., மளிகை கடையிலும் குட்கா இருப்பது தெரியவந்தது. இருகடைகளில் இருந்து 500 கிராம் குட்காவை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி 'சீல்' வைத்தார்.
