/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டூ - வீலர் - ஆட்டோ மோதி விபத்து: ஒருவர் காயம்
/
டூ - வீலர் - ஆட்டோ மோதி விபத்து: ஒருவர் காயம்
ADDED : மார் 11, 2024 10:46 PM

சித்தாமூர் : சித்தாமூர் அடுத்த அமந்தங்கரணை கிராமத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 44. விவசாயி. நேற்று காலை 8:50 மணிக்கு, சொந்த வேலை காரணமாக, போந்துார் சென்று, தன் ஸ்பிளன்டர் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
போந்துார் வயல்வெளிப் பகுதியில் சென்றுகொண்டு இருந்த போது, எதிரே வந்த லோடு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ, அருகே உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், டூ - வீலரில் சென்ற தட்சணாமூர்த்திக்கு கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தட்சணாமூர்த்தி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்கு சென்ற சித்தாமூர் போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

