/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூரில் சமதளமற்ற சாலையால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
/
சித்தாமூரில் சமதளமற்ற சாலையால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
சித்தாமூரில் சமதளமற்ற சாலையால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
சித்தாமூரில் சமதளமற்ற சாலையால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
ADDED : நவ 03, 2025 10:40 PM
சித்தாமூர்:  சித்தாமூரில், செய்யூர் - மேல்மருவத்துார் மாநில நெடுஞ்சாலை, கல்குவாரி லாரிகளால் சமதளமற்ற நிலைக்கு மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சித்தாமூர் பகுதியில், செய்யூர் - மேல்மருவத்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
குறிப்பாக, சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளான சரவம்பாக்கம், கொளத்துார், தொன்னாடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து, அதிக பாரம் ஏற்றிக்கொண்டு நுாற்றுக்கணக்கான லாரிகள், பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றன.
இந்த லாரிகளில் ஜல்லி கற்கள், எம் - -சாண்ட், பி - சாண்ட், கருங்கற்கள் போன்றவை, விதிமுறையை மீறி அதிக அளவில் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதனால், பாரம் தாங்காமல் செய்யூர் - மேல்மருவத்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலை பழுதடைந்து, சாலை சமதளமின்றி மேடு, பள்ளமாக மாறியுள்ளது.இதனால், சாலையில் செல்லும்  இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறிச் செல்கின்றனர்.
குறிப்பாக நல்லாமூர் - சித்தாமூர் இடையே மேல்மருவத்துார் மார்க்கமாக செல்லும் சாலை, சமதளமின்றி உள்ளதால், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

