/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரி லாக்கரில் கணக்கில் வராத ரூ.33 லட்சம் பறிமுதல்
/
லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரி லாக்கரில் கணக்கில் வராத ரூ.33 லட்சம் பறிமுதல்
லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரி லாக்கரில் கணக்கில் வராத ரூ.33 லட்சம் பறிமுதல்
லஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரி லாக்கரில் கணக்கில் வராத ரூ.33 லட்சம் பறிமுதல்
ADDED : ஜன 30, 2024 06:33 AM
காஞ்சிபுரம், : சென்னை, பெருங்குடியைச் சேர்ந்தவர் முனுசாமி; ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர், குன்றத்துாரில் வீடு கட்டுவதற்காக, திட்ட வரைபட அனுமதி கேட்டு, குன்றத்துார் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
கட்டட வரைபடத்திற்கு, 24,000 ரூபாய், குன்றத்துார் கமிஷனர் குமாரி லஞ்சமாக கேட்டுள்ளார். இதையடுத்து, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் முனுசாமி புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 11ம் தேதி, நகராட்சி உதவியாளர் சாம்சன், லஞ்ச பணத்தை பெறும்போது, போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
இதில், நகராட்சி கமிஷனர் குமாரியை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் அன்றைய தினமே சோதனை செய்யப்பட்டது. அப்போது, 5.80 லட்ச ரூபாய் பணமும், வங்கி லாக்கர் சாவி மூன்றும் கைப்பற்றப்பட்டன.
குன்றத்துார் நகராட்சி கமிஷனராக, மாங்காடு நகராட்சி கமிஷனர் ராணி பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், குமாரி வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட வங்கி லாக்கரை திறக்க, செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில், போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நீதிமன்ற நடுவர் ஜெயஸ்ரீ அனுமதி அளித்ததை தொடர்ந்து, தாம்பரம், சேலையூர் ஆகிய இடங்களில் உள்ள மூன்று வங்கி லாக்கர்களில், காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் நேற்று சோதனை செய்தனர்.
அதில், மூன்று வங்கி லாக்கர்களிலும், 33 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. கணக்கில் வராத 33 லட்சம் ரூபாயை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.