/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 'பர்மிட்' இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல்
/
செங்கையில் 'பர்மிட்' இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 22, 2025 12:12 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டில், 'பர்மிட்' இல்லாமல் இயங்கிய ஐந்து ஆட்டோக்களை, வட்டார போக்குவரத்து அலுவலர், நேற்று பறிமுதல் செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அதிக அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில், 'பர்மிட்' வாகன அனுமதி, தகுதிச்சான்று, மீட்டர், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார்கள் வந்தன.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர், நேற்று மாலை 4:30 மணியளவில், திடீரென வாகன சோதனை நடத்தினர்.
இதில், பர்மிட், தகுதிச்சான்று, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட ஐந்து ஆட்டோக்களை பறிமுதல் செய்து, 82,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
செங்கல்பட்டு நகர காவல் நிலைய வளாகத்தில், இந்த பறிமுதல் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.