/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் இணைப்பு கிடைக்காததால் திறக்கப்படாத ரேஷன் கடை
/
மின் இணைப்பு கிடைக்காததால் திறக்கப்படாத ரேஷன் கடை
ADDED : பிப் 19, 2025 11:52 PM

சித்தாமூர்,சித்தாமூர் அருகே பெரியகளக்காடி ஊராட்சிக்கு உட்பட்ட கூணங்கரணை கிராமத்தில் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.
பல ஆண்டுகளாக தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வந்த நியாயவிலைக் கடை, தற்போது நுாலக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
புதிய நியாயவிலைக் கடை கட்டடம் அமைக்க வேண்டி கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், 2021-22ம் ஆண்டு செய்யூர் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய நியாய விலைக் கடை கட்டடம் அமைக்கப்பட்டது.
கட்டுமானப்பணிகள் முடிந்து, மின் இணைப்பு பெறாமல் உள்ளதால், கடந்த ஓராண்டாக நியாய விலைக் கடை கட்டடம் செயல்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது.
ஆகையால் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக பொது வினியோகத் திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, செயல்படாமல் உள்ள புதிய நியாயவிலைக்கடை கட்டடத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

