ADDED : பிப் 26, 2024 10:31 PM

அ நிறம் | அளவு
திருவொற்றியூர் : வடசென்னை எம்.பி.,யாக, தி.மு.க.,வைச் சேர்ந்த கலாநிதி உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், 5 லட்சத்து, 90 ஆயிரத்து, 986 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட, தே.மு.தி.க.,வின் அழாகபுரம் மோகன்ராஜ் என்பவரை, 4 லட்சத்து, 61 ஆயிரத்து, 518 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, எம்.பி.,யாக தேர்வாகினார்.
இந்த நிலையில், வடசென்னை தொகுதியில் மீண்டும் அவரே போட்டியிடலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. இதற்கிடையில், திருவொற்றியூர் முழுதும் ஒட்டப்பட்டுள்ள மர்ம போஸ்டரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
போஸ்டரில், 'கண்டா வரச் சொல்லுங்க; எங்க தொகுதி எம்.பி.,யை எங்கேயும் காணவில்லை?' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் யார் என்பது குறித்து, தற்போது தொகுதி முழுதும் பேசுப் பொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
