ADDED : மார் 25, 2026 04:10 PM

சித்தாமூர்:அங்கன்வாடி மைய வளாகத்தில் உள்ள கட்டுமானக் கழிவுகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சித்தாமூர் -- செய்யூர் சாலை ஓரத்தில் ஒரே வளாத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாற்று இடத்தில் புதிய பள்ளிக் கட்டடம் அமைக்கப்பட்டு, பள்ளி தற்போது புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பயன்பாடு இன்றி இருந்த பழைய பள்ளி கட்டடம் , கடந்த சில மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டுமான கழிவு அகற்றப்படாததால், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். மேலும், அங்கு விஷ ஜந்துகளின் கூடாரமாக மாற வாய்ப்புள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு, கட்டுமான கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
