/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரும்புலி ஊராட்சியில் வசிக்கும் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்
/
இரும்புலி ஊராட்சியில் வசிக்கும் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்
இரும்புலி ஊராட்சியில் வசிக்கும் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்
இரும்புலி ஊராட்சியில் வசிக்கும் நரிக்குறவர் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 15, 2025 01:47 AM

சித்தாமூர்:இரும்புலி ஊராட்சியில் வசிக்கும் 40 நரிக்குறவர் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்கின்றனர்.
சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகரணை கிராமத்தில் 40 நரிகுறவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 2004 ம் ஆண்டு மதுராந்தகம், மேல்மருவத்துார், அச்சிறுப்பாக்கம், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் சாலை மற்றும் பொது இடங்களில் வசித்து வந்த நரிகுறவ குடும்பத்தினரை, வீட்டுமனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்குவதாக கூறி அதிகாரிகள் அவர்களை சிறுகரணை கிராமத்தில் குடி அமர்த்தினர்.
கடந்த 20ஆண்டுகளாக பட்டா வழங்க வேண்டும் என, மக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது வரை பட்டா இல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசின் சலுகைகளை பெற முடியாமல் அவர்கள் அவதிப்படுகின்றனர்.
இரும்புலி ஊராட்சி சார்பாக மத்திய அரசின் ஜன்மேன் திட்டத்தின் கிழ் வீடு கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பட்டா இல்லாததால் வீடு கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கூறியதாவது:-
நாங்கள் பல ஆண்டுகளாக சோத்துப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தோம், கடந்த 2004ம் ஆண்டு வீட்டுமனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்குவதாக கூறி அரசு அதிகாரிகள் 40 குடும்பத்தினரை இங்கு இடமாற்றம் செய்தனர். தற்போது வரை வீட்டுமனை பட்டா இல்லாததால், அரசு சலுகைகளை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தால், நாங்கள் தற்போது வசிக்கும் இடம் மேயக்கால் புறம்போக்கு வகைபாட்டில் உள்ளது, ஆகையால் பட்டா வழங்க முடியாது என, தெரிவிக்கின்றனர். மேலும் தெரு விளக்கு மற்றும் சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டுகின்றனர்.
இந்நிலையில் தற்போது சிறுகரணை கிராமத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட அகிலி கிராமத்தில் வீட்டுமனை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாற்று இடத்தில் பட்டா வழங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கும், ஆகையால் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.