/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்வாய்பாளையம் ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

ADDED : அக் 15, 2025 12:20 AM

பவுஞ்சூர்:நெல்வாய்பாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் ஊராட்சியில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கெங்கையம்மன் கோவில் பகுதியில் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாதாகோவில் தெருவில் சாலை வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
சர்ச் தெரு, 3 வது குறுக்கு தெருவில் கால்வாய் இல்லாததால், குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. குமாரகுப்பம், மாணிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நெல்வாய்பாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதி ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.