/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கல் சரணால பகுதிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்
/
வேடந்தாங்கல் சரணால பகுதிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்
வேடந்தாங்கல் சரணால பகுதிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்
வேடந்தாங்கல் சரணால பகுதிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 06, 2025 07:34 PM
மதுராந்தகம்:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதி வரை பேருந்து சென்று வர பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலத்திற்கு இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வலசை வருகின்றன.
பறவைகளை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணியர் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் சுற்றுலா வருகின்றனர்.
மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் இருந்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதிக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுராந்தகத்தில் இருந்து வேடந்தாங்கல் வழியாக வெள்ளப்புத்துார் வரை செல்லும் தடம் எண் : டி 17 மற்றும் 221 பேருந்து இயக்கப்படுகிறது. தினமும் மூன்று முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மதுராந்தகத்தில் இருந்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வழியாக சென்று, பின் வெள்ளப்புத்துார் செல்லும் தடம் எண் : டி 17 பேருந்து, வெள்ளப்புத்துாரில் இருந்து மீண்டும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வந்து, பின் அங்கிருந்து மதுராந்தகம் செல்ல வேண்டும்.
ஆனால், மறு மார்க்கத்தில், வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வராமல், நேரடியாக மதுராந்தகம் சென்று விடுகிறது.
அதனால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதியில் உள்ள சுற்றுலா பயணியர் மற்றும் பொதுமக்கள், பேருந்துக்காக இரண்டு கி.மீ., துாரம் நடந்து சென்று, வேடந்தாங்கல் கூட்டு சாலையில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அதேபோன்று, மதுராந்தகம் - வெள்ளப்புத்துார் வரை செல்லும் தடம் எண் : 221 பேருந்தை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வரை நீட்டிக்க வேண்டும்.
எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

