/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க வலியுறுத்தல்

ADDED : மே 18, 2025 02:31 AM

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 35,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பேரூராட்சியில் 40 துப்புரவு பணியாளர்கள் 2 டிராக்டர்கள் மற்றும் பேட்டரி வாகனங்களில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துாய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு அருகே உள்ள செய்யூர், சூணாம்பேடு, கொளத்துார் உள்ளிட்ட ஊராட்சிகளில் குப்பை அதிகம் தேங்கும் இடங்களில் துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு, குப்பை சேகரிக்கப்படுகின்றன.
ஆனால் இடைக்கழிநாடு பேரூராட்சியில் குப்பைத் தொட்டிகள் இல்லாத காரணத்தால், பொதுமக்கள் குப்பையை சாலை ஓரத்தில் கொட்டிச் செல்கின்றனர். சாலை ஓரத்தில் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் கால்நடைகள் குப்பையை கிளறுவதால் நோய்தொற்று பரவும் நிலை ஏற்படுகிறது.
துறை சார்ந்த அதிகாரிகள் இடைக்கழிநாடு பேரூராட்சியில் குப்பை அதிகம் தேங்கும் இடங்களில் குப்பைத் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.