/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரனுாரில் மேம்பால பணி நடைபெறும் பகுதியில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
/
பரனுாரில் மேம்பால பணி நடைபெறும் பகுதியில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
பரனுாரில் மேம்பால பணி நடைபெறும் பகுதியில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
பரனுாரில் மேம்பால பணி நடைபெறும் பகுதியில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2025 06:23 AM

சிங்கபெருமாள் கோவில்: பரனுார் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் விபத்துகள் நடைபெற்று வருவதால், ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனுார் ரயில்வே மேம்பாலத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இந்த பகுதியில் முறையாக எச்சரிக்கை விளக்குகள் மற்றும் குறியீடுகள் இல்லாத நிலையில், சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது.
குறிப்பாக, பணிகள் நடைபெறும் பகுதியில் இருந்து நுாறு மீட்டர் துாரத்தில் வைக்க வேண்டிய எச்சரிக்கை பலகைகள் சாலை வளைவில் உள்ளதால், விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
பரனுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து சுங்கச்சாவடி வரை, கடந்த மூன்று ஆண்டுகளாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, நெடுஞ்சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
இங்கு பணி தொடங்கியதில் இருந்து, பல்வேறு விபத்துகளில் 8க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது, செங்கல்பட்டு மார்க்கத்தில் பழைய சாலையில் இருந்து வாகனங்கள் புதிய சாலை வழியாக வளைந்து செல்கின்றன.
இந்த வளைவுக்கு முன், எச்சரிக்கை பலகை மற்றும் இரவில் ஒளிரும் விளக்குகள் எதுவும் வைக்கப்படவில்லை.
இதன் காரணமாக, புதிதாக வரும் வாகனங்கள் மட்டுமின்றி, தினமும் சென்று வரும் அரசு பேருந்துகளும் விபத்தில் சிக்கி வருகின்றன.
கடந்த 10 நாட்களில் இங்கு, அடுத்தடுத்து மோதிக்கொண்ட அரசு பேருந்துகள், வளைவு தெரியாமல் தடுப்புகளில் மோதி நின்ற கார்கள் என, விபத்துகள் தொடர்கதையாக உள்ளன.
இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.

