/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேரூராட்சியில் நடக்கும் திட்ட பணிகள் தகவல் பலகை வைக்க வலியுறுத்தல்
/
பேரூராட்சியில் நடக்கும் திட்ட பணிகள் தகவல் பலகை வைக்க வலியுறுத்தல்
பேரூராட்சியில் நடக்கும் திட்ட பணிகள் தகவல் பலகை வைக்க வலியுறுத்தல்
பேரூராட்சியில் நடக்கும் திட்ட பணிகள் தகவல் பலகை வைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 12, 2024 11:15 PM
மாமல்லபுரம்:பேரூராட்சிப் பகுதிகளில் திட்டப் பணிகள் நடக்கும் இடங்களில், அதுகுறித்து தகவல் பலகை வைக்காததால், பொதுமக்கள் அறிய முடியாத நிலை உள்ளது.
உள்ளாட்சி, பொதுப்பணி உள்ளிட்ட அரசுத் துறைகளின் கீழ், பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் நடக்கின்றன.
அத்தகைய திட்டப் பணிகள் குறித்த ஒப்பந்த அறிவிப்பு, ஒப்பந்தம் அளிக்கப்பட்ட அறிவிப்புகள், அலுவலக தகவல் பலகையில் அவசியம் இடம்பெற வேண்டும்.
ஒப்பந்ததாரர் பணிகளை துவக்கியதும், பணி நடக்கும் இடத்தில், அப்பணியின் மதிப்பீடு, நிதியாண்டு, பணி துவக்கிய நாள், ஒப்பந்ததாரர் அல்லது நிறுவனம், ஒப்பந்த காலம் உள்ளிட்ட விபரங்களுடன், தகவல் பலகை அமைக்க வேண்டும்.
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் பொது நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், 15வது நிதிக்குழு மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் ஒப்பந்தம் குறித்து, தகவல் பலகையில் முறையாக அறிவிப்பதில்லை. பணி நடக்கும் இடத்தில், தகவல் பலகையும் அமைப்பதில்லை.
இதனால், மதிப்பீடு தொகைக்கேற்ப, தரமாக பணிகள் நடக்கிறதா, முறைகேடாக செய்யப்படுகிறதா என்பதை, பொதுமக்கள் அறிய முடியவில்லை.
மேலும், நிதி ஒதுக்கும் போது, பணம் பெற்றுக்கொள்ளலாம் எனக் கருதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் தாமாக முன்னதாகவே பணிகளை செய்வதாக, அவ்வப்போது குற்றச்சாட்டும் எழுகிறது.
இதுதொடர்பாக, தொடர்ந்து புகார் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், திட்டப் பணிகளில் வெளிப்படைத் தன்மை இருக்கவும், பணியிடத்தில் பணி விபரம் குறித்து தகவல் பலகை அமைக்கவும் வலியுறுத்துகின்றனர்.

