/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பாக்கம் உபரி நீர் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
/
பெரும்பாக்கம் உபரி நீர் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
பெரும்பாக்கம் உபரி நீர் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
பெரும்பாக்கம் உபரி நீர் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 13, 2025 12:22 AM

செய்யூர்:வீரபோகம் கிராமத்தில் பழுதடைந்துள்ள பெரும்பாக்கம் ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
செய்யூர் அடுத்த வீரபோகம் கிராமத்தில் 8 கி.மீ., நீளம் உடைய பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பெரும்பாக்கம்ஏரி உபரிநீர் கால்வாய் உள்ளது.
வீரபோகம் சுற்றுவட்டாரப்பகுதிகளான பெரும்பாக்கம் ,சிறுவங்குணம், செங்காட்டூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், இந்த கால்வாய் வழியாக வங்கக்கடலில் கலக்கிறது.
இந்த கால்வாய், இப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் நீர்வரத்து கால்வாயாகவும் உள்ளது. இந்த கால்வாய் வாயிலாக 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் பாசன வசதி பெறுகின்றன.
உபரிநீர் கால்வாயில் செடிகள் வளர்ந்து, கரைகள் சேதமடைந்து உள்ளதால் மழைநீர் விவசாய நிலத்தில் புகுந்து, பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
ஆகையால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைத்து கால்வாயில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.