/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
/
கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 27, 2025 10:37 PM
சித்தாமூர்:சித்தாமூர் பகுதியில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சித்தாமூர் பஜார் பகுதியில் 4 பள்ளிகள் செயல்படுகின்றன. காட்டுதேவத்துார், சரவம்பாக்கம், பொலம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவ- மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் சைக்கிள், வேன்,பேருந்துகள் மூலமாக பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்படுகிறது.
கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து லாரிகள் மூலமாக ஜல்லிகள் மற்றும் எம்-சாண்ட் கட்டுமானப்பணிகளுக்காக, சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன.
தினசரி அதிகபடியான லாரிகள் சித்தாமூர் பஜார் பகுதியில் செல்வதால், காலை மற்றும் மாலை வேலைகளில் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து செல்ல கடும் அவதிப்படுகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் காலை, மாலை வேளைகளில் சித்தாமூர் பஜார் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.