/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார், ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திற்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்
/
வண்டலுார், ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திற்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்
வண்டலுார், ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திற்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்
வண்டலுார், ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திற்கு சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்
ADDED : மே 21, 2025 08:37 PM
கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு, வண்டலுார் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களிலிருந்து சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தினமும், 2,000க்கும் மேற்பட்ட பேருந்துகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வெளியூர்களுக்கு பயணிக்கின்றனர்.
பயணியர் வசதிக்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, 250 மீ., தொலைவில், புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமானப் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வர, ஓராண்டிற்கும் மேல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரும் பயணியர், மூட்டை முடிச்சுகளோடு வீட்டிலிருந்து புறப்பட்டு, அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் பயணித்து, கிளாம்பாக்கம் வந்தடைவதில் கடும் சிரமம் உள்ளது.
இதைத் தவிர்க்க, ஊரப்பாக்கம் மற்றும் வண்டலுார் ரயில் நிலையங்களிலிருந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து, 1,500 மீ., தொலைவில் வண்டலுார் ரயில் நிலையமும், 800 மீ., தொலைவில் ஊரப்பாக்கம் ரயில் நிலையமும் உள்ளன.
இந்த இரண்டு ரயில் நிலையங்களிலிருந்தும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு சிற்றுந்துகள் இயக்கப்பட்டால், பயணியர் மிக எளிதாக வந்து செல்ல முடியும்.
வண்டலுார் அல்லது ஊரப்பாக்கம் வரை புறநகர் ரயிலில் பயணித்து, அங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு சிற்றுந்துகளில் செல்வது, பயணத்தை எளிமையாக்கும். தவிர, ரயிலில் அதிக சுமைகளை எடுத்துச் செல்ல முடியும்.
எனவே, ஊரப்பாக்கம் மற்றும் வண்டலுார் ரயில் நிலையங்களிலிருந்து, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு நேரடி சிற்றுந்து சேவையை வழங்க வேண்டும்.
இதனால், அதிகமான பயணியர் மிக எளிதாக, விரைவாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரவும், மீண்டும் வீடு திரும்பவும் வழி பிறக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.