/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பட்டு மயான பாதைக்கு சாலை அமைக்க வலியுறுத்தல்
/
புதுப்பட்டு மயான பாதைக்கு சாலை அமைக்க வலியுறுத்தல்
புதுப்பட்டு மயான பாதைக்கு சாலை அமைக்க வலியுறுத்தல்
புதுப்பட்டு மயான பாதைக்கு சாலை அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2025 12:59 AM

சூணாம்பேடு,:புதுப்பட்டு கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதையில் சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
சூணாம்பேடு அருகே புதுப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர்.
கிராமத்தின் மயானம் ஓங்கூர் ஆற்றங்கரையில் உள்ளது. கிராம மக்கள் மயானத்திற்கு செல்ல வயல்வெளிகள் வழியாக செல்லும் 1.5 கிலோ மீட்டர் நீளம் உடைய சாலையை பயன்படுத்துகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மயான பாதைக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது, பராமரிப்பு இன்றி நாளடைவில் ஜல்லிகள் பெயர்ந்து சாலை சேதமடைந்தது. சாலையை சீரமைக்க கிராம மக்கள் பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போது வரை மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால், சாலை ஓரங்களில் செடிகள் வளர்ந்து, மழைக் காலங்களில் மயான பாதையில் நீர் தேங்குவதால், மயானத்திற்கு செல்ல கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.