/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்க வலியுறுத்தல்
/
மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்க வலியுறுத்தல்
மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்க வலியுறுத்தல்
மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 05, 2025 10:10 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், மழைநீர் கால்வாய் துார்வரும் பணியை, வடகிழக்கு பருவ மழைக்குமுன், துவக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர், வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இந்நகரில், ஜே.சி.கே., நகர், வேதாசலம் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதியில், மழை காலங்களில், சாலைகளில் மழை நீர் தேங்கி கடுமையாக நகரவாசிகள் பாதிக்கப்படுவர்.
இதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் மழைநீர் கால்வாய் துார்வரும் பணியை, வடகிழக்கு பருவ மழைக்கு முன், துவக்கி சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.