/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கம் சமூக நலக்கூடம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
/
ஊரப்பாக்கம் சமூக நலக்கூடம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ஊரப்பாக்கம் சமூக நலக்கூடம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ஊரப்பாக்கம் சமூக நலக்கூடம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : அக் 26, 2025 10:09 PM
ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் சமூக நலக்கூடம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, அடித்தட்டு மக்கள் இல்ல நிகழ்ச்சி நடத்துவதற்காக, சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் என, நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், 2023ல் மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 2,400 சதுர அடி பரப்பில், 'மகிளா மன்றம்' என்ற பெயரில் சமூக நலக்கூடம் அமைக்க, 78 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
ஊரப்பாக்கத்திலிருந்து காரணை புதுச்சேரி செல்லும் சாலை அருகே, அரசுக்கு சொந்தமான காலி இடத்தில், இதற்கான கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன.
ஆனால், பணிகளில் பெரும் சுணக்கம் நிலவியதால், இரண்டு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், தற்போது 90 சதவீத கட்டுமான பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.
எனவே, மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து, சமூக நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

