/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரும் 30க்குள் நில விபரம் பதிவு செய்ய வலியுறுத்தல்
/
வரும் 30க்குள் நில விபரம் பதிவு செய்ய வலியுறுத்தல்
வரும் 30க்குள் நில விபரம் பதிவு செய்ய வலியுறுத்தல்
வரும் 30க்குள் நில விபரம் பதிவு செய்ய வலியுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 01:34 AM
செங்கல்பட்டு,:செங்கல்பட்டு மாவட்டத்தில், நில விவரங்களை, வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி அறிக்கை:
மத்திய, மாநில அரசுகளின், பல்வேறு திட்ட பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு, அனைத்து விவரங்களும் மின்னணு முறையில் சேகரிக்கப்படுகிறது.
தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதார் எண், மொபைல் எண், நில விபரங்களை இணைக்கும் பணி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, அனைத்து வட்டாரங்களிலும் நடந்து வருகிறது.
மாவட்டத்தில், 59 ஆயிரத்து 317 விவசாயிகளில், 38 ஆயிரத்து 111 விவசாயிகள், தங்கள் நில உடைமை விபரங்களை பதிவு செய்து உள்ளனர். இதில், 21 ஆயிரத்து 206 விவசாயிகள் தங்களது, நில உடைமை விபரங்களை உடனே பதிவு செய்து கொள்ள வேண்டும். பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில், 27 ஆயிரத்து 132 விவசாயிகளில், 19 ஆயிரத்து 980 பேர் பதிவு செய்துள்ளனர். 7 ஆயிரத்து 152 விவசாயிகள் நில விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கு, வரும் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

