ADDED : செப் 30, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு : -செங்கல்பட்டு நகராட்சி, அண்ணா நகரில், சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு மற்றும் வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள், அடிக்கடி நிகழ்கின்றன.
இதனால், திருட்டு மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கண்காணிக்க, சில ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், கிடப்பில் போட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், இருசக்கர வாகனங்கள் மோதியதில் இரண்டு பேர் இறந்தனர். இதுமட்டும் இன்றி, குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இச்சம்பவங்களை தடுக்க, அப்பகுதியில் திறக்கப்படாத புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

