/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயன்பாடில்லாமல் வீணாகி வரும் வையாவூர் ஊராட்சி கழிப்பறை
/
பயன்பாடில்லாமல் வீணாகி வரும் வையாவூர் ஊராட்சி கழிப்பறை
பயன்பாடில்லாமல் வீணாகி வரும் வையாவூர் ஊராட்சி கழிப்பறை
பயன்பாடில்லாமல் வீணாகி வரும் வையாவூர் ஊராட்சி கழிப்பறை
ADDED : டிச 26, 2025 05:46 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வையாவூர் ஊராட்சியில் கட்டப்பட்ட சமுதாய கழிப்பறை பயன்பாடில்லாமல் வீணாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டு வையாவூர் ஊராட்சி உள்ளது. இங்கு, பழமையான திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் உள்ளது.
கோவிலின் அடிவாரம் பகுதியில், சமுதாய கூடம் அருகே கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை கட்டப்பட்டது. நாளடைவில் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், 2022 ---23 ல், 15 வது நிதிக்குழு மூலமாக, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை சீரமைக்கப்பட்டது. ஆனால், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
இதனால், பக்தர்கள் மற்றும் பகுதி மக்கள் அருகில் உள்ள ஏரி பகுதிக்கு செல்கின்றனர்.
எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர், கழிப்பறை வளாகத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

