UPDATED : பிப் 24, 2025 02:41 AM
ADDED : பிப் 23, 2025 07:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த வெளியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 27.
இவர், தாம்பரம் அருகே செயல்படும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களை அழைத்துச் செல்லும் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்குச் சொந்தமான 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் ஆணைகுன்னம் சென்று, வாகனத்தை அங்கு நிறுத்திவிட்டு, தனியார் நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி, இவரது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து, ஒரத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.