/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நில உட்பிரிவு செய்ய ரூ.15,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
/
நில உட்பிரிவு செய்ய ரூ.15,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
நில உட்பிரிவு செய்ய ரூ.15,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
நில உட்பிரிவு செய்ய ரூ.15,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
ADDED : செப் 04, 2025 02:37 AM

செய்யூர்:வெடால் கிராமத்தில், நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய, 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன், 25. இவர், தன் பூர்வீக நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தரும்படி, வெடால் கிராம நிர்வாக அலுவலர் ராமன் என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார்.
இதற்கு ராமன், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத தமிழரசன், இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நேற்று காலை 10:00 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர், ரசாயனம் தடவிய 15,000 ரூபாய் கொண்ட நோட்டுகளை, தமிழரசனிடம் கொடுத்து அனுப்பினர்.
நேற்று அலுவலகத்தில், கிராம நிர்வாக அலுவலர் ராமனிடம், தமிழரசன் பணம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், ராமனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின், அவர் மீது வழக்கு பதிந்து, இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.