ADDED : ஜன 30, 2026 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், நவீனமயமாக்க கிராம நிர்வாக அலுவலகம், கிராம பகுதிகளை தேர்வு, சிறப்பு ஆகிய நிலைகள் என வகைப்படுத்துவது, அந்தஸ்து நிலைக்கேற்ப ஊதியம் வழங்குவது.
இப்பணி கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக நிர்ணயிப்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும் நேற்று போராட்டம் நடத்தினர்.
திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில், சங்க வட்ட தலைவர் மோகன், செயலர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

