/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : மே 16, 2025 09:30 PM
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அடுத்த கீழ்மருவத்துார் பாரதியார் நகரிலுள்ள பழமையான வரசித்தி விநாயகர் கோவிலில், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
பணிகள் முடிவுற்று, கும்பாபிஷேகம் செய்ய விழா குழுவினர், பகுதிவாசிகள் முடிவு செய்து, கடந்த 14ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது.
கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால பூஜைகள் துவங்கி, முறையே இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தன.
நேற்று காலை, மங்கள இசையுடன் யாக பூஜை ஹோமம், மஹா பூர்ணாஹுதி நடந்தது.
பின், மேளதாளங்கள் முழங்க கலசம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்திற்கு யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், ஜீர்ணோதாரன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று முதல் 48 நாட்கள், மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.