/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் உலர்த்தும் களமான வாயலுார் பாலாற்று பாலம்
/
நெல் உலர்த்தும் களமான வாயலுார் பாலாற்று பாலம்
ADDED : பிப் 19, 2024 11:34 PM

புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் பாலாற்றுப் படுகையை வாகனங்கள் கடக்க, 50 ஆண்டுகளுக்கு முன், 1 கி.மீ., நீள தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம், நீண்டகாலமாக கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்திற்கு பயன்பட்டது.
தற்போது, பலவீனமடைந்த நிலையில், கடந்த 2016ல், பழைய பாலம் அருகில், நான்கு வழி பாலம் கட்டப்பட்டது.
புதிய பாலத்தில் வாகனங்கள் கடக்கின்றன. பழைய பாலம், குடிமகன்களின் மது அருந்தும் புகலிடமாக மாறியது.
மதுப்பிரியர்கள், வாயலுார் டாஸ்மாக்கில் மது வாங்கி, இப்பாலத்தில் முகாமிட்டு, மது அருந்திவிட்டு, காலி மதுபாட்டில், குடிநீர் கேன், நொறுக்குத்தீனி காலி பாக்கெட்டுகளை பாலத்திலும், ஆற்றிலும் வீசுகின்றனர்.
அதனால், பாலத்தில் குப்பை குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தற்போது, அருகில் நெல் அறுவடை செய்த விவசாயிகள், பாலத்தில் உள்ள குப்பைக் குவியலை அகற்றி துாய்மைப்படுத்தி, நெல் உலர்த்தும் களமாக பயன்படுத்தி வருகின்றனர்.

