ADDED : மே 26, 2025 11:55 PM

சித்தாமூர்,சித்தாமூர் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே செல்லும், 37 கி.மீ., துார மாநில நெடுஞ்சாலை உள்ளது.
சுற்றுப் பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை சார்பாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகன கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதற்கு ஏற்ப, சாலையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு வாகனங்கள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இதில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் சித்தாமூர், சூணாம்பேடு, வெண்ணாங்குப்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மையங்கள் அமைத்து, வாகன கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதில், 15 நிமிட கால அளவு நிர்ணயம் செய்து, வாகனங்களின் போக்குவரத்து குறித்து பதிவு செய்து வருகின்றனர்.