/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டாஸ்மாக் எதிரே மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
டாஸ்மாக் எதிரே மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
டாஸ்மாக் எதிரே மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
டாஸ்மாக் எதிரே மாநில நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : நவ 16, 2025 01:58 AM

செய்யூர்: பாலுார் கிராமத்தில், டாஸ்மாக் கடை எதிரே நிறுத்தப்படும் வாகனங்களால், மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பவுஞ்சூர் அடுத்த பாலுார் கிராமத்தில், மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி, அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இயங்கும் இந்த டாஸ்மாக் கடைக்கு வருவோர், மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, மது வாங்க கடைக்குச் செல்கின்ற னர்.
இதனால், சாலையின் அளவு குறுகி பேருந்து, வேன், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது.
டாஸ்மாக் கடையை மையப்படுத்தி செயல்பட்டு வரும் சில உணவு கடைகளாலும், இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, நண்பகல் 12:00 முதல் 2:00 மணி வரை மற்றும் இரவு நேரத்தில் கூட்டம் அதிகரி ப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கிச் சென்று, அருகிலுள்ள வயல்வெளி மற்றும் பெட்டிக்கடைகள் அருகே மது அருந்தும்,'குடி'மகன்கள், போதை தலைக்கேறி சாலையின் நடுவே நின்று ரகளையில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால், அடிக்கடி சிறு விபத்துகளும் நடந்து வரு கிறது .
எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன், இந்த டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என, இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

