/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் 6 வழிச்சாலையில் சினிமா படப்பிடி போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் தவிப்பு

ADDED : ஏப் 06, 2025 01:59 AM

திருப்போரூர்:திருப்போரூரில் ஆறுவழிச்சாலையை தடுத்து நடந்த சினிமா படப்பிடிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
திருப்போரூர் வட்டத்தில், படூர் - தையூர் வரை ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் பேரூராட்சி காலவாக்கம்- ஆலத்துார் ஊராட்சி வெங்கலேரி இடையே ஒரு ஆறுவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது, இரண்டு புறவழிச் சாலைகளும், 465 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், சாலைப்பணி முடிந்த திருப்போரூர் -- ஆலத்துார் இடையில் அமைக்கப்பட்ட புறவழிச்சாலையில், கனரக வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில், நேற்றும், நேற்று முன்தினமும் திருப்போரூர் ஆறு வழிச்சாலையில் சினிமா படப்பிடிப்பு நடந்தது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த படப்பிடிப்பால் இச்சாலையில், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், எதிர்சாலையில் வாகனங்கள் மாற்றிவிடப்பட்டன. அதில் எதிரெதிரே வாகனங்கள் சென்று வந்தன. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இதுபோல் நடக்கும் சினிமா படப்பிடிப்பிற்கு போலீசார், பேரூராட்சி, நெடுஞ்சாலை, சாலை மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறை தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.