/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி வெண்ணந்தல் கிராமத்தினர் தவிப்பு
/
20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி வெண்ணந்தல் கிராமத்தினர் தவிப்பு
20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி வெண்ணந்தல் கிராமத்தினர் தவிப்பு
20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி வெண்ணந்தல் கிராமத்தினர் தவிப்பு
ADDED : அக் 13, 2025 12:39 AM

சித்தாமூர்:வெண்ணந்தல் கிராமத்தில், 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல், கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
சித்தாமூர் அடுத்த வன்னியநல்லுார் ஊராட்சியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணந்தல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தெரு, புதுத்தெருவில், 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால், மழைக்காலத்தில் தெருக்கள் சகதியாக மாறுவதால், நடந்து செல்ல கூட முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். வாகன ஓட்டிகள், சகதியால் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
மேலும், சாலையில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, இரவு நேரத்தில் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாலை அமைக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, வெண்ணந்தல் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.