/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராம உதவியாளர் தேர்வு ஒத்திவைப்பு
/
கிராம உதவியாளர் தேர்வு ஒத்திவைப்பு
ADDED : நவ 08, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் திருக்கழுக்குன்றம், தாம்பரம், வண்டலுார், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், 41 கிராம உதவியாளர் பணியிடங்கள், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப, வரும் 9ம் தேதி நடைபெற இருந்த எழுதும் திறனுக்கான தேர்வு, நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மேற்படி தேர்வு நடைபெறும் நாள், பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

