/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பட்டரவாக்கத்தில் புதிய ரேசன் கடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
/
பட்டரவாக்கத்தில் புதிய ரேசன் கடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
பட்டரவாக்கத்தில் புதிய ரேசன் கடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
பட்டரவாக்கத்தில் புதிய ரேசன் கடை அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : பிப் 01, 2025 12:30 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பட்டரவாக்கம் ஊராட்சியில், குண்ணவாக்கம் அம்மணம்பாக்கம் சாலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி வளாகத்தில் நியாயவிலைக் கட்டடம், மகளிர் சுய உதவிக் குழு கட்டடம், பட்டரவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இதில் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளை கடந்ததால் தற்போது மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பள்ளி வளாகத்தில் பாழடைந்த கட்டடம் உள்ளதால் பள்ளி குழந்தைகள் அதன் அருகில் விளையாடும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இந்த பழைய கட்டடத்தை இடித்து விட்டு இதே இடத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.