/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான கடுகுப்பட்டு சாலை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
/
சேதமான கடுகுப்பட்டு சாலை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
சேதமான கடுகுப்பட்டு சாலை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
சேதமான கடுகுப்பட்டு சாலை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
ADDED : அக் 31, 2025 11:32 PM

பவுஞ்சூர்: கடுகுப்பட்டு கிராமத்தில், பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் அடுத்த கடுகுப்பட்டு கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கம், நியாய விலை கடை, ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன.
இப்பகுதியில் உள்ள நடுவூர் சாலை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
பராமரிப்பு இல்லாததால், இந்த சாலை கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
வாகன ஓட்டிகளும் இச்சாலையில் அச்சத்துடன் பயணிக்கும் நிலை தொடர்கிறது.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.