/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மானாமதி வனப்பகுதி சாலையை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
/
மானாமதி வனப்பகுதி சாலையை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
மானாமதி வனப்பகுதி சாலையை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
மானாமதி வனப்பகுதி சாலையை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
ADDED : மே 19, 2025 02:41 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கொட்டமேடு கிராமத்திலிருந்து மானாமதி செல்லும் சாலை, 3 கி.மீ., துாரம் உடையது. இச்சாலை, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மானாமதி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அத்தியாவசிய வேலைக்காக செல்வோர், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இச்சாலை மண் சாலையாகவே உள்ளது. இதனால், பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கண்ட சாலையை ஆய்வு செய்து, வனத்துறையிடம் அனுமதி பெற்று, தார்ச்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.