/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
/
சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
ADDED : நவ 14, 2025 01:26 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில் உள்ள, சிறிய குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது.
இதில், 8வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் பிரபல தனியார் தோல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு வரும் மக்கள் மற்றும் அப்பகுதியினர் பயன்பெறும் வகையில், சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
அந்த தொட்டியில் தற்போது பாசி படிந்து, சுகாதாரமின்றி உள்ளது.
குடிநீர் தொட்டியிலுள்ள குழாயில் தண்ணீர் கசிவதால் பாசி படிந்து, அதில் ஈக்கள் மொய்க்கின்றன.
மேலும், குடிநீர் தொட்டியும் சுத்தம் செய்யப்படாததால், இப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் தொட்டியை சீரமைத்து புதிதாக குழாய் அமைக்கவும், அப்பகுதியை துாய்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

