/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடியிருப்பில் தாழ்வாக மின்கம்பிகள் கல்குளத்தில் கிராமத்தினர் அச்சம்
/
குடியிருப்பில் தாழ்வாக மின்கம்பிகள் கல்குளத்தில் கிராமத்தினர் அச்சம்
குடியிருப்பில் தாழ்வாக மின்கம்பிகள் கல்குளத்தில் கிராமத்தினர் அச்சம்
குடியிருப்பில் தாழ்வாக மின்கம்பிகள் கல்குளத்தில் கிராமத்தினர் அச்சம்
ADDED : ஜூன் 02, 2025 02:36 AM

பவுஞ்சூர்:கல்குளம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில், தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் அருகே கல்குளம் ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதி மக்களுக்கு மின் விநியோகம் செய்ய, கடுகுபட்டு துணை மின் நிலையம் வாயிலாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
இதில், கல்குளம் காலனியில் உள்ள கன்னியம்மன் கோவில் சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், மின் கம்பங்களுக்கு நடுவே செல்லும் மின்கம்பிகள் தாழ்ந்து செல்கிறது,
கடந்த சில மாதங்களுக்கு முன், இரண்டு முறை மின்கம்பிகள் சேதமடைந்து, அறுந்து விழுந்தன. அதிஷ்டவசமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
குடியிருப்பு பகுதிகளில் கிராம மக்கள் வசிக்கும் வீடுகள் அருகே மின் கம்பிகள் தாழ்ந்து செல்வதால், விபத்து அச்சத்துடன் கிராமத்தினர் உள்ளனர்.
இதுகுறித்து மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, குடியிருப்பு பகுதியில் விபத்து ஏற்படும் நிலையில் தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளை, புதிய மின்கம்பங்கள் அமைத்து உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.