/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் கிடைக்காமல் மேட்டுகிராமத்தினர் அவதி
/
குடிநீர் கிடைக்காமல் மேட்டுகிராமத்தினர் அவதி
ADDED : ஏப் 11, 2025 10:47 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுகிராமம் பகுதிகளில், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15வது வார்டில் உள்ள மேட்டுகிராமம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேட்டுகிராமம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் பணிக்காக, கடந்த ஒரு வாரத்திற்கு முன், கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
பணி செய்ய ஒப்பந்தம் எடுத்தவர், பணியை துவக்காமல் உள்ளதால், இப்பகுதியில் குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் அச்சிறுபாக்கம் பேரூராட்சி நிர்வாகத்திடம், பலமுறை புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அச்சிறுபாக்கம் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
எனவே, மேட்டுகிராமம் பகுதியில் உள்ள மினி டேங்க் மற்றும் கை 'பம்ப்'பை சீரமைத்து, மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் அச்சிறுபாக்கம் பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.