/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அபாய நிலையில் மின்பெட்டி சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
/
அபாய நிலையில் மின்பெட்டி சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
அபாய நிலையில் மின்பெட்டி சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
அபாய நிலையில் மின்பெட்டி சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
ADDED : ஜூன் 22, 2025 10:56 PM

சித்தாமூர்:ஜமீன் எண்டத்துார் கிராமத்தில், குடியிருப்புப் பகுதியில் விபத்து ஏற்படும் நிலையில் உள்ள மின்பெட்டியை சீரமைக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே ஜமீன் எண்டத்துார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் கூடுதல் நீர் ஆதாரத்திற்காக, குடியிருப்பு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன், 'மினிடேங்க்' எனும் சிறிய தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.
பொதுமக்கள் இந்த தண்ணீரை துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும், பாத்திரங்கள் சுத்தம் செய்வது போன்ற வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டாரின் மின்பெட்டி சேதமடைந்து, விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
ஊராட்சி நிர்வாகம் கவனித்து, சேதமடைந்துள்ள மின்பெட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.