/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவுஞ்சூரில் நடைபாதையுடன் பூங்கா அமைக்க கிராமத்தினர் வேண்டுகோள்
/
பவுஞ்சூரில் நடைபாதையுடன் பூங்கா அமைக்க கிராமத்தினர் வேண்டுகோள்
பவுஞ்சூரில் நடைபாதையுடன் பூங்கா அமைக்க கிராமத்தினர் வேண்டுகோள்
பவுஞ்சூரில் நடைபாதையுடன் பூங்கா அமைக்க கிராமத்தினர் வேண்டுகோள்
ADDED : ஏப் 29, 2025 11:49 PM
பவுஞ்சூர், பவுஞ்சூரில், நடைபாதையுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில், குழந்தைகள் விளையாட பவுஞ்சூர் பகுதியில் பூங்கா வசதி இல்லை. பொதுமக்கள் தங்களது உடலை பலப்படுத்த, உடற்பயிற்சிக்கூடமும் இல்லை.
இதனால் பொதுமக்கள், மதுராந்தகம் - கூவத்துார் சாலையில் காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், இவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மக்கள் அடர்த்தியாக வசித்து வரும் பவுஞ்சூர் பஜார் பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும்.
அங்கு நடைபாதை அமைத்து, விளையாட்டு உபகரணங்களான சறுக்கல், ஊஞ்சல், உடற்பயிற்சிக்கூடம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.