/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குளத்து நீரில் பாசி கிராமத்தினர் அவதி
/
குளத்து நீரில் பாசி கிராமத்தினர் அவதி
ADDED : ஜன 24, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில், பாலுார் - ஒரகடம் சாலையை ஒட்டி, கிராமத்தின் பொது குளம் உள்ளது.
இந்த குளம் கிராமத்தின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது. கால்நடைகளுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக, குளத்தின் தண்ணீரில் பாசி படிந்து, பச்சை நிறமாக மாறி உள்ளது.
இதனால், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, தண்ணீரில் உள்ள பாசியை அகற்ற வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.